3000 கன அடி நீர் வெளியேற்றம்!! அடையாறு மக்களே எச்சரிக்கையாக இருங்க..!!
கனமழை காரணமாக நீர் வெளியேற்றப்படுவதால் அடையாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.
கனமழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. வரும் 5-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. துரித நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகமும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.
ஏற்கனவே, சென்னையின் பல பகுதிகளில் நீர் தேங்கி வரும் நிலையில், நீரின் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகின்றது.செங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் ஊருக்குள் புகுந்து மக்களின் வாழ்க்கையை முடங்கியுள்ளது.
இந்நிலையில் தான், செம்பரம்பாக்க ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீரின் அளவு 3000 கன அடியாக உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அணையின் பாதுகாப்பினை கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
நீரின் வெளியேற்றம் அதிகமாகும் காரணத்தால், அடையாறு மற்றும் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.