எந்த நேரத்திலும் இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படலாம் : என்ஜிஆர்ஐ தலைமை விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்
உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கி நிலநடுக்கம்
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் சரவதேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, துருக்கியை தொடர்ந்து இந்தியாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.ஆனால், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை , அதே சமயம் இந்தியாவிலும் நில நடுக்கம் ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் செய்திகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் என் பூர்ணச்சந்திர ராவ், ஹிமாச்சல் மற்றும் நேபாளத்தின் மேற்குப் பகுதிக்கு இடையே உள்ள நிலநடுக்க அதிர்வின் இடைவெளியை வைத்து பார்க்கும் பொழுது, உத்தரகாண்டில் எந்த நேரத்திலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறினார்.
உத்தரகாண்டில் நிலநடுக்கம்
பூமியின் மேற்பரப்பில் எண்ணற்ற டெகட்டானிக் தட்டுகள் உள்ளது. இந்த தட்டுகள் வருடத்திற்கு 5 செ.மீ வரை நகர்கிறது. இவ்வாறு நகர்வது இமயமலையில் அழுத்ததை அதிகரிக்கிறது என்றும் இது மிக பெரிய பேரழிவு தரும் நிலநடுக்கங்கள் ஏற்படும் சாத்தியத்தை அதிகரிப்பதாக கூறியுள்ளார்.
இந்தியாவில் நிலநடுக்கம் வரும் என்ற செய்தி இதுவரை வதந்தி என நம்பிய நிலையில் தற்போது என்ஜிஆர்ஐ தலைமை விஞ்ஞானி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.