என்னபா வார்னர் செளக்கியமா ? கலாய்த்த சன் ரைசர்ஸ் .. பதிலடி கொடுத்த வார்னர்

twitter warner sunrisers
By Irumporai Dec 29, 2021 10:42 AM GMT
Report

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 14ஆவது சீசனின் முதல் பாதி ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றது. தொடர் தோல்வியை சந்தித்ததால் அதிருப்தியில் இருந்த அணி நிர்வாகம் கேப்டன் டேவிட் வார்னரை பதவியிலிருந்து நீக்கியது.

இதன் பிறகு நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அதிரடியாக விளையாடிய வார்னர் 7 போட்டிகளில் மூன்று அரை சதம் உட்பட 286 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலிய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இதனால், இவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

தற்போது, ஆஷஸ் தொடரிலும் அபாரமாக விளையாடி வருகிறார். இதனால், நல்ல பார்மில் இருக்கும் இவரை ஐபிஎல் மெகா ஏலத்தின்போது எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என பல அணிகள் தீவிரம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மூன்றாவது ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி, இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றதற்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பயிற்சியிளார் டாம் மூடி,ட்விட்டரில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அந்த பதிவில் கமெண்ட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரசிகர்கள் ஒருவர், “மெகா ஏலத்தில் சன் ரைசர்ஸ் எப்படி செயல்படும்? சிறப்பாக செயல்படுமா?” எனக் கேள்வி கேட்டார்.

இதனைப் பார்த்த வார்னர், அதை ரீடிவிட் செய்து, “அது சந்தேகம்தான்” எனக் கலாய்த்தார். உடனே இது வைரலான நிலையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம், வார்னரின் டுவீட்டை, ரீடிவீட் செய்து, “ஆஷஸ் தொடரை வென்றதற்கு வாழ்த்துகள் வார்னர். பார்முக்கு திரும்பியதுபோல் தெரிகிறது.

ஐபிஎலில் நல்ல முறையில் ஏலம் போவீர்கள் என நம்புகிறோம் " என பதிவிட்டுள்ளது. இவ்வாறு ட்விட்டரில் வார்னர்-யும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகமும் மாறி மாறி கலாய்த்து கொண்ட சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.