விராட் கோலிக்காக ரசிகர்களிடம் சண்டைக்கு சென்ற வார்னர் - உச்சக்கட்ட பரபரப்பு
விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் விவகாரத்தில் ரசிகர்கள் வைத்த விமர்சனங்களுக்கு டேவிட் வார்னர் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான விராட் கோலி தொடர்ந்து ரன் குவிக்க தவறி வருவதால் கடந்த 2 வருடங்களாக மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். டி20 மற்றும் ஒருநாள் கேப்டன்சி பதவியில் இருந்து அவர் விலகியதும் தனது பேட்டிங்கை மேம்படுத்துவதற்காக தான் எனக் கூறப்பட்டது.
சதம் அடிக்கவில்லை, சேஸிங் செய்வதில் கிங்கான அவர் சொதப்பி வருவதாக சச்சின், சுனில் கவாஸ்கர் என பல்வேறு முன்னாள் வீரர்களும் அறிவுரை கூறி வருகின்றனர். இந்நிலையில் கோலி மீதான விமர்சனங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் குரல் கொடுத்துள்ளார்.
அதில் விராட் கோலியின் ஃபார்ம் குறித்து நிறைய பேர் பேசி வருகின்றனர். நாம் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். கொரோனா ஊரடங்கை தாண்டி வந்துள்ளோம். கோலி சமீபத்தில் தான் தந்தையானார். அவர் சிறப்பாக விளையாடியதை மட்டும் பார்க்கும் ரசிகர்கள் அவரை ஏன் சொதப்பும் போது ஏற்றுக்கொள்ளவில்லை.
நிறைய சிறப்பான விஷயங்களை செய்தவருக்கு.. சில நாட்கள் மோசமாக விளையாடக்கூட உரிமை இல்லையா?? கோலிக்கு உரிமை உள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 4 இன்னிங்ஸிற்கு ஒரு முறை சதமடிப்பார் என்று புள்ளி விவரம் கூறுகிறது. இதனால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த அழுத்தத்திலேயே அவர் சதத்தை விட்டுவிட்டார்.
கோலியும் ஒரு மனிதர் தான்.. அவருக்கும் கடினமான சூழல்கள் வரக்கூடாதா., அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் தான் அதிகப்படியான அழுத்தங்கள் ஏற்படுகிறது. எனவே ஒவ்வொருவரும் புரிந்துக்கொண்டு நடக்க வேண்டும் என வார்னர் கூறியுள்ளார்.