புஷ்பா பாட்டுக்கு டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர் - வைரலாகும் வீடியோ

alluarjun davidwarner pushpatherise
3 மாதங்கள் முன்

அல்லு அர்ஜூன் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ’புஷ்பா தி ரைஸ்’ படத்தின் பாடலுக்கு ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் ஆடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா'. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஆனால் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் படத்தில் இடம் பெற்ற வசனங்களும் ரீல்ஸ் போன்றவற்றில் பலரால் நடிக்கப்பட்டு இடம்பெற்றுள்ளது. 

குறிப்பாக கிரிக்கெட் வீரர்களான டேவிட் வார்னர்,ஜடேஜா போன்றோர் புஷ்பா படத்தின் வசனத்தை நடித்து வீடியோ பதிவிட்டனர். இதில் டேவிட் வார்னர் கடந்த ஓராண்டாகவே இந்திய சினிமா மீது தீராத ஆசைக் கொண்டுள்ளார் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு டிக்டாக், ரீல்ஸ் என இந்திய சினிமா பாடல்கள், வசனங்களை நடித்து வீடியோ வெளியிடுவார். 

அந்த வகையில் புஷ்பா படத்தில் இடம்பெற்ற  மற்றொரு பாடலான ‘ஸ்ரீவல்லி’ பாடலுக்கு டேவிட் வார்னர் நடனமாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். சித் ஸ்ரீராம் பாடியிருக்கும் அந்தப் பாடலுக்கு அல்லு அர்ஜூன் கெட்டப் போட்டு அவர் ஆடும் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அதிலும், வலது பக்கமாக நடந்து செல்லும்போது, வார்னரின் செருப்பு கழன்றுவிடுவது, காண்போரை சிரிக்க வைத்துவிடுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.