மத்திய கிழக்கில் மேலும் அதிகரிக்கும் பதற்றம்..வெடிக்கும் உலகம் தழுவிய போர்!! இந்தியா அரசு எச்சரிக்கை
நேற்று ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதி ஃபுவாத் ஷுக்ரு, இஸ்ரேல் ராணுவத்தால் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் படுகொலை செய்யப்பட்டார்.இன்று ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹரானில் கொலை செய்யப்பட்டார்.
இஸ்ரேலுக்கு கொடுக்கப்போகும் பதிலடி பற்றி ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூடி விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் தலைநகரிலேயே ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டிருப்பதால், ஈரான் நேரடியாக்க களமிறங்கினால் போரின் தாக்கல் உலகம் தழுவியதாக மாறும் என அஞ்சப்படுகிறது.
ஹிஸ்புல்லா போர் தீவிரமானாலும் அதன் தாக்கம் பெரிய அளவில் இருக்கும். ஹமாஸை விட பல மடங்கு ஆயுதப்பலம் கொண்ட அமைப்பு ஹிஸ்புல்லா என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஹமாஸ் - இஸ்ரேல் யுத்தம் ஓயாத நிலையில், இஸ்ரேலின் வாடா எல்லையில் ஹிஸ்புல்லாடனான போர் தீவிரமடையும் ஆபத்து உண்டாகியிருக்கிறது.
இஸ்ரேல் மற்றும் லெபனானில் இந்தியர்கள் கணிசமான அளவில் வசித்து வருவதாகா குறிப்பிடத்தக்கது. போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மேலும், போர் பதற்றத்தை தீவிரமாக கண்காணிக்க துவங்கியுள்ளது இந்திய அரசு.முன்னதாக, ஹிஸ்புல்லா என்பது லெபனான் நாட்டை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஒரு ஷியாத் முஸ்லிம் அரசியல் மற்றும் போராளிக் குழு ஆகும்.