போர் பதற்றம்.., 498 தமிழர்கள் உதவி கேட்டு அழைப்பு

Tamil nadu Israel Iran Iran-Israel War
By Yashini Mar 02, 2026 12:30 PM GMT
Report

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலில் உதவி கேட்டு அழைத்த இந்தியர்களில் 498 பேர் தமிழர்கள் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 28ஆம் தேதி இரவு 11.55 மணியிலிருந்து தற்போது வரை 974 இந்தியர்கள் உதவி கேட்டு அழைப்பு வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், உதவி கேட்டு அழைத்ததில் 498 பேர் தமிழர்கள் என தமிழக அரசின் வெளிநாட்டு வாழ் நலத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

போர் பதற்றம்.., 498 தமிழர்கள் உதவி கேட்டு அழைப்பு | War Tension 498 Tamils Call For Help Tn Gov

இவர்கள் தொழில் ரீதியாகவும், சுற்றுலா ரீதியாகும் சென்று சிக்கியவர்கள் என்றும் அவர்களுக்கு உணவு, இருப்பிடம் ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.

மேலும், அவர்களின் உறவினர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஐக்கிய அரபு-253, பக்ரைன்-95, கத்தார்-66, சவுதி அரேபியா-13, சிங்கப்பூர்-25, ஓமன்-6 என தமிழர்கள் உதவிகோரி அழைப்பு விடுத்துள்ளனர் என்று தகவல் அளித்துள்ளது.