கொரோனா தடுப்பு பணிகளுக்கான War Room அமைப்பு! தொலைபேசி எண்கள் அறிவிப்பு

covid19 telephone warroom
By Irumporai May 14, 2021 11:39 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பணிகளுக்கான கட்டளை அறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், படுக்கைகள், ஆக்ஸிஜன் படுக்கைகள், மருந்து போன்றவைக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது.

இந்த பிரச்னைகளை  தீர்க்கும் வகையில், மருந்து இருப்பு, படுக்கை வசதி, ஆக்ஸிஜன் இருப்பு பற்றி அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைக்கும் கட்டளை அறை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த அறைக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.