சக்தி வாய்ந்த போர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா: புடினுக்கான எச்சரிக்கை செய்தி?
ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யா கடும்போக்கு நடவடிக்கை மேற்கொண்டால், அமெரிக்கா தனது நட்பு நாடுகளை பாதுகாக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு உணர்த்தும் வகையில் ஜனாதிபதி ஜோ பைடன் சக்தி வாய்ந்த போர் விமானங்களை நோர்வேக்கு அனுப்ப உள்ளார். போர் விமானங்களுடன் 200 அமெரிக்க ராணுவத்தினரும் நோர்வேயில் உள்ள ஆர்லாண்ட் விமானத் தளத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று வாரங்களுக்குள், ஆர்க்டிக் வட்டம் மற்றும் ரஷ்யாவின் வடமேற்கு கடற்கரையின் சர்வதேச வான்வெளியில் இந்த நடவடிக்கை தொடங்கும் என கூறப்படுகிறது. முன்னதாக ஆர்க்டிக் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை பிரித்தானியாவே முன்னெடுத்து வந்தது. தற்போது அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது, ரஷ்யாவின் கடும்போக்கு நடவடிக்கைகளுக்கு கண்டிப்பாக ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்றே பார்க்கப்படுகிறது.
மட்டுமின்றி, ரஷ்யாவுடன் இணக்கமாக சென்ற டிரம்ப் அரசு போன்று, பைடன் அரசு இருக்காது என்றே கூறப்படுகிறது.