அப்புறம் என்ன அஃபிரிடி இல்ல இந்திய வீரர்களுக்கு நிம்மதி தான்.. பாக். வீரர் சர்ச்சை கருத்து

India Indian Cricket Team Pakistan national cricket team
By Irumporai Aug 21, 2022 09:07 AM GMT
Report

பாகிஸ்தான் வீரர் அப்ரிடி ஒய்வில் இருப்பது இந்திய அணிக்கு சாதகமான நிம்மதியான ஒன்று என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனிஸ் வம்பிழுத்துள்ளார்.

ஆசிய கோப்பை 

ஆசிய கோப்பை தொடர் வரும் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது . இதில் இந்தியா, பாகிஸ்தான் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் மோதுகின்றன.

அப்புறம் என்ன அஃபிரிடி இல்ல இந்திய வீரர்களுக்கு  நிம்மதி தான்.. பாக். வீரர் சர்ச்சை கருத்து | Waqar Younis Teases India Shaheen Afridi Injury

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாயின் ஷா அப்ரிடி, காயம் ஏற்பட்டதன காரணமாக விலகியுள்ள நிலையில் இந்திய அணியினை வம்பிழுத்துள்ளார்.

இந்திய வீரர்களுக்கு நிம்மதி

பாகிஸ்தான்முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனிஸ் சதனது ட்விட்டர் பதிவில் ஷாயினுக்கு ஏற்பட்டுள்ள காயம், இந்திய அணியின் முன்வரிசை வீரர்களுக்கு மிகப் பெரிய நிம்மதியை கொடுத்திருக்கும்.

ஆசிய கோப்பையில் அப்ரிடியை காண முடியாதது வருத்தம் தான். மீண்டும் விரைவில் உடல் தகுதியை எட்ட வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். ரோகித் சர்மா டி20 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை 8 போட்டிகளில்70 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

அப்புறம் என்ன அஃபிரிடி இல்ல இந்திய வீரர்களுக்கு  நிம்மதி தான்.. பாக். வீரர் சர்ச்சை கருத்து | Waqar Younis Teases India Shaheen Afridi Injury

ஆகவே ரோகித் சர்மா பாகிஸ்தான் வீரருக்கு யூனிஸ் க்கு தனது ஆட்டத்தின் மூலம் பதிலடி தர வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.