சர்ச்சையை கிளப்பிய பாகிஸ்தான் வீரரின் பேச்சு, கொந்தளித்த நெட்டிசன்கள்

Waqar Younis namaz comment
By Irumporai Oct 27, 2021 12:07 PM GMT
Report

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மதரீதியாக பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை (T20 World Cup) போட்டி கடந்த ஞாயிற்றுகிழமை துபாய் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 151 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 17.5 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியின் தண்ணீர் இடைவேளையின் போது பாகிஸ்தான் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan), மைதானத்தில் தொழுகை செய்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்த  வீடியோ பதிவிற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாக்கர் யூனிஸ் தொலை காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சர்ச்சையானது

அதில், 'பல லட்சம் இந்துக்களுக்கு முன் முகமது ரிஸ்வான் நமாஸ் செய்தார். இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதை விட, இதுதான் எனக்கு ஸ்பெஷலாக இருந்தது' என வாக்கர் யூனிஸ் கூறினார்.  வாக்கர் யூனிஸ்  இந்த பேச்சு சமூக வலைதளங்களில் சர்ச்சையானது.

இந்த நிலையில், வாக்கர் யூனிஸ் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், ஒரு வேகத்தில் அப்படி பேசிவிட்டேன். நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. என்னுடைய கருத்துக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

வேண்டுமென்றே அப்படி பேசவில்லை, தவறு நிகழ்ந்துவிட்டது. விளையாட்டு என்பது இனம், நிறம், மதத்தை தாண்டி மக்களை ஒன்றிணைக்கும் விஷயம்' என வாக்கர் யூனிஸ் கூறியுள்ளார்.