வெம்பக்கோட்டையில் மறைந்து கிடக்கும் வரலாறு - அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ஆதாரம்!
வெம்பக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வில் சுவர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அகழாய்வு
தமிழக தொல்லியல் துறை சார்பில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள வைப்பாற்றின் கரையோர பகுதிகளில் இரண்டாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது.
இதற்கு முன் இங்கு நடத்தப்பட்ட முதல் கட்ட அகழாய்வில் தங்க ஆபரணங்கள், சங்கு வளையல், பகடைக் காய்கள், தங்கத்தால் ஆன தாலி உட்பட 3254 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் 3600க்கும் அதிகமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சுவர் கண்டுபிடிப்பு
இந்நிலையில் இந்த அகழாய்வின் புதிய மைல்கல்லாக, தற்போது கருங்கல் மற்றும் செங்கல் கொண்டு உருவாக்கப்பட்ட வட்டவடிவிலான சுவர் ஒன்று கிடைத்துள்ளது. இந்த சுவர் 5 அடி ஆழத்தில் இருந்துள்ளது.
இந்த சுவர் கண்டறியப்பட்டதின் மூலம், முற்காலத்தில் இந்த பகுதி ஒரு தொழிற்கூடமாகவோ அல்லது மக்களின் வாழ்விடமாகவோ இருந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.