கனமழையால் சுவர் இடிந்து விழுந்து விபத்து - 9 பேர் உயிரிழப்பு

Uttar Pradesh Death
By Thahir Sep 16, 2022 06:22 AM GMT
Report

லக்னோவில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்தனர்.

9 பேர் உயிரிழப்பு 

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தில்குஷா பகுதியில் உள்ள ராணுவ வளகத்திற்கு வெளியே சில தொழிலாளர்கள் குடிசைகளில் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது.இதனால் அவர்கள் வசித்து வந்த குடிசைகளின் மீது ராணுவ சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கனமழையால் சுவர் இடிந்து விழுந்து விபத்து - 9 பேர் உயிரிழப்பு | Wall Collapses Due To Heavy Rain 9 Killed

மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சமும், காயமடையந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு 

தொடர் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.அம்மாநிலத்தில் உள்ள பல பகுதிகளுக்கு ஆரஞ்சு வகை கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கனமழையை கருத்தில் கொண்டு, லக்னோ மாவட்ட நிர்வாகம், பழைய பாழடைந்த கட்டிடங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் முழு முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பழமையான பாழடைந்த கட்டிடங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மிகவும் அவசியமான போது வெளியில் செல்லவும்.

நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும். திறந்தவெளி சாக்கடைகள், மின் கம்பிகள், மின்கம்பங்களைத் தவிர்க்கவும். ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமூக சுகாதார நிலையங்கள் உஷார் நிலையில் இருக்குமாறு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.  

மாநிலத்தின் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. லக்னோ விமான நிலையத்திலும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.