பாகிஸ்தான் அணிக்கு திருப்பி கொடுக்க காத்திருக்கிறோம் - கே.எல்.ராகுல்
டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்ததை மறக்கல இந்த முறை தவறு நடக்காது என கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
தொடங்கியது ஆசிய கோப்பை தொடர்
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கி வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
நாளை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக்க போட்டிகளில் ஒன்று.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரின் கோப்பையை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.
இந்த முறை தப்பாது
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கு காத்திருப்பதாக கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய கே.எல்.ராகுல்,
எப்போதும் பாகிஸ்தான் அணியுடனான போட்டி எங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும். பாகிஸ்தான் அணியுடனான போட்டியானது நமக்கும் நாமே சவால் விடும் சிறந்த வாய்ப்பு.
கடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்தது இன்னும் வருத்தமளிக்கிறது. வலுவான பாகிஸ்தானிடம் ஆட்டம் இழந்தோம்.
அவர்களுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.இந்த முறை எந்த தவறும் நடக்காது என நம்புவதாக தெரிவித்துள்ளார்.