ஜூலை 1 முதல் ரயில்களில் காத்திருப்பு பட்டியல் இனி இருக்காது - ரயில்வேத்துறை அறிவிப்பு

By Nandhini Jun 15, 2022 11:30 AM GMT
Report

வரும் ஜூலை 1 முதல், தட்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் 50 சதவீத தொகை திருப்பித் தரப்படும் என்று ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.

ரயில்வேத்துறை வெளியிட்ட அறிக்கை 

இது குறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -

தட்கல்லில் காலை 10 மணி முதல் காலை11 மணி வரை ஏசி கோச்களுக்கும், ஸ்லீப்பர் கோச்களுக்கு காலை 11 மணி முதல் 12 மணி வரை முன்பதிவு செய்யலாம். மேலும், சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்களில் காகித டிக்கெட்டுகளுக்கு பதிலாக டிக்கெட் மொபைலில் அனுப்பப்பட உள்ளது.

இணையத்தில் ரயில்வேயின் புதிய இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுகளை வெவ்வேறு மொழிகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம். வரும் ஜூலை 1 முதல், சதாப்தி மற்றும் ராஜதானி ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளன.

ஜூலை 1 முதல் ராஜதானி, சதாப்தி, டுரான்டோ மற்றும் மெயில்-எக்ஸ்பிரஸ் ரயில்களில் சுவிதா ரயில்களை இயக்கப்பட உள்ளது. வரும் ஜூலை 1ம் தேதி முதல் ரயில்வே பிரீமியம் ரயில்களை முற்றிலுமாக நிறுத்தப் போகிறது சுவிதா ரயில்களில் டிக்கெட் திரும்பப் பெறும்போது 50% கட்டணம் திருப்பித் தரப்பட உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

ஜூலை 1 முதல் ரயில்களில் காத்திருப்பு பட்டியல் இனி இருக்காது - ரயில்வேத்துறை அறிவிப்பு | Waiting List On Trains