இடைத்தேர்தலுக்காக வெறியோடு காத்திருக்கிறேன் - சீமான் பரபரப்பு பேச்சு

Tamil nadu DMK Seeman TVK
By Vinoja Aug 02, 2026 11:49 AM GMT
Report

நாம் தமிழர் கட்சியில் புதிதாக 1,000 பேர் இணையும் நிகழ்ச்சி பல்லாவரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

விளம்பர அரசியல் 

அவர் குறிப்பிடுகையில், நடிகருக்கும் தலைவருக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் உணர வேண்டும் என்றும், தமிழக வெற்றி கழகம் மற்றும் அதன் தலைவர் விஜயை விமர்சித்த அவர், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்களில் மதம், சாதி அடிப்படையிலான வேட்பாளர் தேர்வால் சாதி, மத ஒழிப்பைப் பற்றி பேச முடியாது என்றார்.

இடைத்தேர்தலுக்காக வெறியோடு காத்திருக்கிறேன் - சீமான் பரபரப்பு பேச்சு | Waiting For The By Election Seeman

திமுக அரசை போன்று தமிழக வெற்றி கழகமும் விளம்பர அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய சீமான், அரசு நிதியை விளம்பரங்களுக்கு செலவிடுவதை விமர்சித்தார்.

மேலும், மின்கட்டணம், மீனவர் பாதுகாப்பு, ஜல் ஜீவன் திட்டம், லஞ்ச ஒழிப்பு உள்ளிட்ட விவகாரங்களிலும் கேள்வி எழுப்பினார்.

கரூர் சம்பவத்தில் அரசு வேலை வழங்கியதையும் எதிர்ப்பதாக தெரிவித்த அவர், "இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என்று வெறியோடு காத்திருக்கிறேன்" என்று கூறினார்.