என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் - சசிகலா
பொதுச்செயலாளர் யார் என்பதை கழக உடன்பிறப்புகளும் முடிவு செய்ய வேண்டிய விஷயம் என சசிகலா தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் சாய்பாபா கோயில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேகத்தை காண்பதற்காக சசிகலா மற்றும் சசிகலா சகோதரர் திவாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பதை பொதுமக்களும், கழக உடன்பிறப்புகளும் முடிவு செய்ய வேண்டிய விஷயம். என்னை சந்திக்க ஓபிஎஸ் மட்டுமல்ல யார் வந்தாலும் சந்திப்பேன் என தெரிவித்தார்.
இதன்பின், முன்னாள் அமைச்சர்கள் தற்போதைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களா என்ற கேள்விக்கு, கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
எடப்பாடி பழனிசாமி நான்தான் பொதுச்செயலாளர் என கூறி வருவதற்கு உங்களுடைய பதில் என்ன என்ற கேள்விக்கு, நீங்க பார்க்கத்தானே போறீங்க என்றும் பேட்டியளித்தார்.
யுத்தக்காலத்தில் கூட மதஸ்தலங்களில் புலிகள் கை வைக்கவில்லை: அமைச்சரை கண்டித்த சாணக்கியன் எம்.பி IBC Tamil