இந்த தப்ப செய்யாதீங்க ப்ளீஸ் - இந்திய அணிக்கு விவிஎஸ் லட்சுமணன் அட்வைஸ்

Petchi Avudaiappan
in விளையாட்டுReport this article
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ லட்சுமணன் அட்வைஸ் வழங்கியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது . இதனால் இந்த போட்டித் தொடர் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் தென்னாப்பிரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா,இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளை தவிர வேற எந்த அணியும் தோற்கடிக்கவில்லை என்பதால் இந்த போட்டி இந்திய அணிக்கு மிகப் பெரும் சவாலாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதனிடையே முன்னாள் வீரர்கள் பலரும் இந்த தொடர் குறித்தான தங்களது எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் இந்திய அணிக்கு முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் அட்வைஸ் வழங்கியுள்ளார்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பின் பேசிய அவர், இந்திய அணி முன்பு செய்த தவறை இந்த தொடரில் மீண்டும் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புஜாரா மற்றும் ரஹானே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.
கடந்த தொடர்களில் இந்திய அணியில் டாப் பாட பேட்ஸ்மேன்கள் மிக மோசமாக விளையாடி வருகிறார்கள். இதை இந்திய அணி உணர்ந்து அதை மாற்றிக்கொள்ள வேண்டும். அணியின் பின் வரிசை ஆர்டர் மிகவும் பலம் வாய்ந்ததாக இருப்பதால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிக கவனத்துடன் விளையாடி அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்று விவிஎஸ் லட்சுமணன் கூறியுள்ளார்.