அசந்தால் ஆட்டம் குளோஸ்... ஷிகர் தவானை எச்சரிக்கும் முன்னாள் வீரர்..
இலங்கை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷிகர் தவான், தனிப்பட்ட ஆட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான வி.வி.எஸ்.லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.
ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்கள் பலரை உள்ளடக்கிய 2ம் தர இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ளது.
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்த தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், முன்னாள் வீரர்கள் பலர், இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மண், இந்திய அணியின் கேப்டனான ஷிகர் தவானுக்கு பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அதில் இந்த வாய்ப்பை ஷிகர் தவான் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். எதிர்வரும் டி20 உலகக்கோப்பையில் தனக்கான இட உறுதி செய்து கொள்ள உதவும்.இது அனைத்தையும் மனதில் வைத்து கொண்டே ஷிகர் தவான் இலங்கை தொடரில் விளையாட வேண்டும் அவர் கூறியுள்ளார்.