அஸ்வினுக்கே இப்படி ஒரு நிலைமையா? - புலம்பி தள்ளும் முன்னாள் வீரர்

INDvsENG R Ashwin vvs laxman
By Petchi Avudaiappan Aug 04, 2021 07:47 PM GMT
Report

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வினுக்கு இடம் கொடுக்கப்படாதது குறித்து முன்னாள் வீரர் லக்‌ஷ்மண் கருத்து தெரிவித்துள்ளார்

. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அஸ்வினுக்கே இப்படி ஒரு நிலைமையா? - புலம்பி தள்ளும் முன்னாள் வீரர் | Vvs Laxman Talks About India Playing Squad

இதனைத் தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21ரன்கள் எடுத்துள்ளது. இதனிடையே இப்போட்டிக்கான ஆடும் லெவன் அணியில் மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோர் சேர்க்கப்படாதது குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது.

ரசிகர்களும் இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் அஸ்வின் மிக திறமையான பந்துவீச்சாளர் அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு தொடர்களில் மிக சிறப்பாகவும் விளையாடியுள்ளார் என முன்னாள் இந்திய வீரர் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார். மேலும் அஸ்வினுக்கு இடம் கொடுக்கப்படாதது தனக்கே ஆச்சரியத்தை கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.