இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் இவர்தான்; அப்போ கம்பீர்? பரவும் தகவல்!
இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக விவிஎஸ் லஷ்மன் நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
தொடர் தோல்வி
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் தேர்வு மோசமாக இருந்ததாக விமர்சிக்கப்படுகிறது.
இந்த தொடர் தோல்விகளின் எதிரொலியாக, இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து கம்பீர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக வி.வி.எஸ். லட்சுமண் நியமிக்கப்படலாம் என தகவல் பரவி வருகிறது.
புதிய பயிற்சியாளர்
கம்பீர் பயிற்சியின் கீழ் விளையாடியுள்ள 13 டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
பிசிசிஐ தரப்பிலிருந்து, கம்பீரின் பதவிக்காலம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் இந்திய அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீரே நீடிப்பார்.
இங்கிலாந்து தொடர் முடிந்த பிறகு, பிசிசிஐ இது குறித்து ஆலோசனை நடத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.