வி.சி.க கட்சி தலைவர் திருமாவளவன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

Thol. Thirumavalavan Tamil nadu Chennai
By Jiyath Sep 26, 2023 05:21 AM GMT
Report

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உடல்நலக் குறைவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிகழ்ச்சிகளில் பங்கேற்று சென்னை திரும்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் முதுகு எரிச்சல் காரணமாக அவதிப்பட்டுள்ளார்.

வி.சி.க கட்சி தலைவர் திருமாவளவன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி! | Vsk Thirumavalavan Admitted To Hospital I

மேலும், சென்னை வட பழனியிலுள்ள கட்சி அலுவலகத்தில் மணிக்கணக்கில் நின்றுகொண்டே கட்சி நிர்வாகிகளையும், பார்வையாளர்களையும் சந்தித்துள்ளார் திருமாவளவன். இதனால் மிகவும் சோர்வடைந்து, உடல் வலி மற்றும் காய்ச்சலும் அவருக்கு வந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில் நேற்றிரவு வடபழனியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். இதில் அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.

அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் 2 நாட்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.