ஸ்டாலின் முதல்வரானதில் இந்த விஷயம் தான் பாராட்டப்பட வேண்டியது: வி.பி.துரைசாமி
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஒரு மாதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், அவரது செயல்பாடுகள் குறித்து பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று கடந்த மே 7-ஆம் தேதி தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார். திமுக ஆட்சிக்கு வந்து இன்றோடு ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, இந்த 30 நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 300 க்கும் மேற்பட்ட கமிட்டி போட்டுள்ளார் என்றும், கமிட்டிகளை போடுவதற்குப்பதில் முதல்வரே முடிவு எடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் முதல்வராக பதவியேற்றதில் பாராட்டும்படியான ஒரு விஷயம் என்றால், வெளிநாட்டில் படித்து பட்டம் பெற்ற பழனிவேல் தியாகராஜனை நிதியமைச்சராக நியமித்ததுதான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய வி.பி.துரைசாமி, தமிழக அரசிடம் நான் எதிர்பார்ப்பது பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தான் எனவும் கூறினார்.