பலத்த பாதுகாப்புடன் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குபதிவு தொடங்கியது
தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் உள்பட 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 வீரர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்களும் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 537 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள், 10,183 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடி அலுவலர் களாக 4 லட்சத்து 17,521 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 8,014 நுண் பார்வையாளர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 59,165 வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் தலா 91,180 எண்ணிக்கையில் தயாராக உள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச் சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.