அரியலூர் - கட்டுபாட்டு இயந்திரம் பழுது காரணமாக 1 மணிநேரம் வாக்குபதிவு நிறுத்திவைப்பு
அரியலூரில் உள்ள வாக்குசாவடியில் கட்டுபாட்டு இயந்திரம் பழுதால் 1 மணிநேரமாக வாக்குபதிவு நிறுத்தப்பட்டது.
அரியலூர் நகரிலுள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைபள்ளியில் 18-வது வார்டிற்கான வாக்குசாவடி அமைக்கபட்டுள்ளது.
இந்நிலையில் ஆண்கள் வாக்கு செலுத்தும் மையத்தில் இன்று வாக்குபதிவு கட்டுபாட்டு இயந்திரம் பழுதானதால் வாக்கு பதிவு நிறுத்தபட்டுள்ளது.
இதனையடுத்து பெல் நிறுவனத்தின் பொறியாளர் வரவழைக்கபட்டு இயந்திரத்தின் பழுது சரி செய்யபட்டு வருகிறது.
இதனால் சுமார் 1 மணி நேரமாக வாக்குபதிவு நிறுத்தபட்டுள்ளதால் வாக்காளர்கள் வெளியில் நிறுத்தி வைக்கபட்டுள்ளனர்.
18-வது வார்டில் 525 ஆண் வாக்காளர்கள் உள்ள நிலையில் தற்போது வரை 274 வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடதக்கது.