பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது
தமிழகத்தில் 21 மாநகராட்சிகளில் உள்ள 1,374 வார்டுகளுக்கும், 138 நகராட்சியில் 3,843 வார்டுகளுக்கும், 490 பேரூராட்சியில் 7,621 வார்டுகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் கடைசி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வந்த நிலையில்,
தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட அனைத்து பிரசார நிகழ்ச்சிகளும்,
வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக முடித்துக் கொள்ள வேண்டும் என்பதால்,தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் நாளை காலை 7 மணி முதல் வாக்குபதிவு தொடங்கவுள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் மொத்தமாக 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
மேலும், வாக்குப்பதிவு மையங்களில் 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த மின்னணு எந்திரங்கள் அனைத்தும் இன்று காலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடக்கவுள்ள வாக்குப்பதிவு மையங்களுககு கொண்டு செல்லப்பட்டன.