தொகுதி மறுவரையறை மசோதா: இன்று வாக்கெடுப்பு
தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மற்றும் யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 4 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதாவால் தென்னிந்திய மாநிலங்களுக்கான அரசியல் பிரதிநித்துவம் குறையும் என காங்கிரஸ், திமுக உட்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுதொடர்பில் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவும் ராகுல் காந்தியை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின், திமுக உடனிருக்கும் எ்ன உறுதியும் அளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு நாடாளுமன்றத்தில் இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது, நேற்று நடைபெற்ற முதற்கட்ட வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 251 வாக்குகளும், எதிராக 185 வாக்குகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.