வாக்களிக்க ஆதார் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களை காட்டலாம்- தேர்தல் ஆணையம்

Tamil nadu Election Tamil Nadu Election 2026
By Yashini Apr 22, 2026 10:06 AM GMT
Report

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தலில் வாக்களிக்க, வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும், மாற்று ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

அதன்படி, ஆதார் அட்டை, வங்கி அல்லது தபால் கணக்குப் புத்தகம், MGNREGA பணி அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஓய்வூதிய ஆவணம், பாஸ்போர்ட் , அரசு அல்லது பொதுத் துறை பணியாளர் அடையாள அட்டை, எம்.பி, எம்.எல்.ஏ அடையாள அட்டை, ஊனமுற்றோர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

வாக்களிக்க ஆதார் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களை காட்டலாம்- தேர்தல் ஆணையம் | Voting Can Be Done By Showing 12 Alternative Doc

மேலும், பூத் சிலிப் மட்டும் வாக்களிக்க செல்லுபடியாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் எந்த ஆவணத்தையும் காட்டி வாக்களிக்க முடியாது.