வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி வாய்ப்பு
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜன 1ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த டிச19 தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வந்தன.
இதனைத்தொடர்ந்து, திருத்தம் மேற்கொள்ள ஜன 30ஆம் தேதி வரை படிவங்களை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கான முகாம்கள் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த முகாம்கள் மொத்தம் 4097 வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வருகிறது.
வருகிற ஜன 31ஆம் தேதியுடன் வாக்காளர் சேர்க்கைக்கான காலக்கெடு முடிவடையவுள்ளதால் இது கடைசி சிறப்பு முகாம் ஆகும்.
எனவே, புதிய வாக்காளர்களும், பெயர் நீக்கப்பட்டவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், சமர்ப்பிக்கப்படும் படிவங்கள் சரிபார்க்கப்பட்டு, பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.