இறுதியாகும் வாக்காளர் பட்டியல்: நாளை பூத் சிலிப் விநியோகம்

Election
By Fathima Apr 06, 2026 04:40 AM GMT
Report

வாக்காளர் பட்டியல்

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க தகுதியானவர்களின் பட்டியல் இன்று இறுதி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்ந்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியான பட்டியலில் 97,37,831 பெயர்கள் நீக்கப்பட்டன.

இதில் தகுதியான நபர்கள் மீண்டும் ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டது, இதனடிப்படையில் வெளியான பட்டியலில் 5.67 கோடி பேர் இடம்பெற்றிருந்தனர்.

இறுதியாகும் வாக்காளர் பட்டியல்: நாளை பூத் சிலிப் விநியோகம் | Voter List Finalized In Tamilnadu

தொடர்ந்து புதிய வாக்காளர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு கடந்த மாதம் 26ம் தேதி இறுதிநாள் என அறிவிக்கப்பட்டது.

பூத் சிலிப் விநியோகம்

காலக்கெடு முடிவடைந்த நிலையில், இன்று வாக்காளிக்க தகுதியானவர்களின் பட்டியல் இறுதி செய்யப்படுகிறது.

இறுதியாகும் வாக்காளர் பட்டியல்: நாளை பூத் சிலிப் விநியோகம் | Voter List Finalized In Tamilnadu

தொடர்ந்து வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) அச்சிடப்பட்டு, நாளை முதல் வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதில் வரிசை எண் மற்றும் பாகம் எண் வழக்கத்தை விட பெரிதாக அச்சிடப்பட்டு, புகைப்படத்துக்கு பதிலாக க்யூ ஆரே் குறியீடு இடம்பெற்றிருக்கும்.   

இறுதியாகும் வாக்காளர் பட்டியல்: நாளை பூத் சிலிப் விநியோகம் | Voter List Finalized In Tamilnadu