வாக்காளர் அட்டை இல்லையா? கவலையை விடுங்க - இவை இருந்தாலே போதும்
நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகிறார்கள். இந்த முறை தமிழகத்தில் 6 கோடியே 2 லட்சத்து 67 ஆயிரத்து 446 பேர் வாக்களிக்க தகுதியடைந்துள்ளனர். சட்டமன்ற தேர்தலில் இம்முறை அதிமுக, திமுக, அமமுக-தேமுதிக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் என ஐந்து முனை போட்டி நிலவி வருகிறது.
இந்த சட்டமன்றத் தேர்தலில் தான் இரு பெரும் தலைவர்களான கருணாநிதியுடம், ஜெயலலிதாவும் இல்லாமல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்கு டெல்லியிலிருந்து பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் தேர்தல் களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் அடையாள அட்டையாக, வாக்காளர் அட்டையை தவிர்த்து வேறு எந்தெந்த ஆவணங்களை கொண்டு செல்லலாம் என இந்திய தேர்தல் ஆணையம் 11 ஆவணங்களை பரிந்துரை செய்துள்ளது.
அவை வருமாறு - 1. ஆதாா் அட்டை 2. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை 3. வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடியது ) 4. தொழிலாளா் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு (ஸ்மாா்ட் காா்டு வடிவில் ) 5. ஓட்டுநா் உரிமம் 6. பான் கார்டு

7. தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் காா்டு
8. பாஸ்போர்ட்
9. ஓய்வூதிய ஆவணம் ( புகைப்படத்துடன் கூடியது)
10. மத்திய மற்றும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட பணி அடையாள அட்டை ( புகைப்படத்துடன் கூடியது)
11. எம்.பி., எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை