''நம் வாக்கு நம் உரிமை'' - வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு போன மக்கள் எவ்வுளவு தெரியுமா?
தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சாதாரண நாட்களில் சென்னையில் இருந்து 2200 பேருந்துகள் வரை வெளியூர்களுக்கு இயக்கப்படும். தற்போது தேர்தல் என்பதால் மக்களின் வசதிக்காக கூடுதலாக தினசரி 800-850 பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படுகிறது.
தினசரி 3000 பேருந்துகள் என்று ஏப்ரல் 1 தொடங்கி தேர்தல் முடிந்து மறுநாள் வரை இயக்கப்பட உள்ளது. இதில் 17000 பேருந்துகள் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு மொத்தமாக இயக்கப்படுகிறது. இதில் சென்னைக்கு உள்ளே இணைப்பு பேரூந்துகளாக 350 பேருந்துகள் தினசரி கூடுதலாக இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
இதுவரை 10,500 பேருந்துகளில் 4,22,957 பேர் பயணித்துள்ளனர். வெறும் 4 நாட்களில் இத்தனை பேர் சொந்த ஊர்களுக்கு வாக்கு அளிக்க சென்றுள்ளனர் ‘‘ஆம் நம் வாக்கு நம் உரிமை’’.