தாமரைக்கு வாக்களித்தால் ஆறு சிலிண்டர் தருவேன் பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க - நமீதா பிரச்சாரம்

bjp vote cylinders namitha
By Jon Mar 28, 2021 11:14 AM GMT
Report

தேர்தல் நெருங்கிக் கொண்டே இருப்பதால் அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறு மதுரையில் பாஜகவுக்கு ஆதரவாக நடிகை நமீதா பிரச்சாரம் செய்தார். மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் சரவணன் சீமான் நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவருக்கு ஆதரவாக நமீதா பிரச்சாரம் மேற்கொண்டார். வணக்கம் மச்சான்ஸ் என்று பிரச்சாரத்தை தொடங்கியபோது அங்குள்ள பாஜகவினர் மகிழ்ச்சியில் உற்சாக குரலை எழுப்ப தனது பேச்சை தொடங்கினர் நமீதா. “வேட்பாளர் சரவணன் ட்ரஸ்ட் மூலமாக 20 வருடமாக சேவை ஆற்றிவருகிறார், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியுள்ளார். 350 அறுவைசிகிச்சை இலவசமாக செய்துள்ளார். ஒன்னுமில்லாத கட்சியில் நிறைய செய்த சரவணன் நம்ம பாஜகவில் இணைந்த சரவணன் இனி மோடி போல உதவுவார்.

தாமரைக்கு ஓட்டு போட்டால் என்ன லாபம் என தெரிந்துகொள்ளுங்கள் என பட்டியலை வாசித்த நமிதா. தாமரைக்கு ஓட்டு போட்டால் மத்திய மாநில அரசின் திட்டங்கள் வீடு தேடி வரும், 6 சிலிண்டர்கள் தருவேன், பிரியாணி செய்து சாப்பிடலாம், என்னையும் கூட கூப்பிடுங்க. ஆனால் வெஜ்டேரியன் பிரயாணி தான் வேண்டும், இதேபோல் 1500ரூபாய் தருவோம், இடம் இல்லாதவங்களுக்கு வீடு கட்டி தருவோம்.

மேலும் வீட்டில் ஒரு நபருக்கு அரசு வேலையும், இலவச வாசிங்மெசின் தர போறேன், ப்ரீ கேபிள் கனெக்சன் தருவோம், உங்களுக்கு பிடித்த பேவரீட் சீரியல் பாத்துகிட்டே இருங்க, அதனால் தமாரைக்கு ஓட்டு போடுங்க மதுரையில் தாமரை மலரும் தமிழகம் வளரும், ஓட்டுபெட்டியில் முதல் பட்டனை தான் பயன்படுத்த வேண்டும் அதில் தான் தாமரை இருக்கும் அதனால தாமரைக்கு ஒட்டு போடுங்க” என்றார்.