நான் இவர்களுக்குதான் வாக்களிப்பேன்-ஜக்கி வாசுதேவ் அதிரடி
தனது கோரிக்கைகளை யார் நிறைவேற்றுகின்றாரோ அவர்களுக்கே தனது வாக்கினை அளிப்பேன் என ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
கோவையில் ஈஷா யோகா மையம் ஜக்கி வாசுதேவ் செய்தியாளர் சந்தித்தார்.அப்போது பேசிய அவர், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை உருவாக்கவேண்டும் என கூறினார்.
கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது, 36 ஆயிரம் கோயில்களை படிப்படியாக அரசிடம் இருந்து தனியாரிடம் கொடுக்க வேண்டும். வருகின்ற தேர்தலில் இந்த கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றுபவர்களுக்கு என்னுடைய வாக்கை அளிப்பேன் என்பதை தெரிவிக்கிறேன்.
வேளாண் சட்டத்தை ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் அமல்படுத்தாமல், அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு மாற்றி கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.