வாக்கு எண்ணும் பணியில் இருப்போருக்கு கொரோனா பரிசோதனைக் கட்டாயம்
சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. மேலும் வாக்கு எண்ணும் பணிகள் வருகிற மே 2ம் தேதி எண்ணப்படவுள்ளன. மேலும் வாக்கு என்னும் பகுதிகளுக்கு 3 அடுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்காக தயாராக உள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் எனவும் ஏப்ரல் 28-ம் தேதி சென்னையில் உள்ள அனைத்து மண்டல அலுவலகங்களிலும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
மேலும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசியல் கட்சி முகவர்களுக்கும் ஏப்ரல் 28-ம் தேதி கொரோனா பரிசோதனை.
அரசியல் கட்சி முகவர்களுக்கு ஏப்ரல் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.