மதுரை: 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

DMK Tamil Nadu Election ADMK
By mohanelango May 02, 2021 02:32 AM GMT
Report

மதுரை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி அளவில் தொடங்கியது.

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம், சோழவந்தான், திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு, மதுரை மேற்கு, மதுரை தெற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி என மொத்தம் பத்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 26 லட்சத்து 97 ஆயிரத்து 682 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இவர்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவின்போது 19 லட்சத்து 881 பேர் வாக்களித்தனர் . ஒட்டு மொத்த மதுரை மாவட்டத்திலும் 70.46 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உளள அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு இயநதிரங்களும நான்கு இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

மதுரை மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியில் பதிவான வாக்குகள் அனைத்தும் மதுரை மருத்துவக கல்லூரி வளாகததிலும், உசிலமபட்டி, சோழவந்தான் சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் கீழக்குயில்குடி அருகே உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகததிலும், திருப்பரங்குன்றம், திருமஙகலம் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் தமிழ்நாடு பாலிடெக்னிக கல்லூரி வளாகத்திலும், மதுரை கிழககு மற்றும் மேலூர் சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் ஒத்தக்கடையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி வளாகத்திலும் எண்ணப்பட்டு வருகின்றன.

மதுரை மாவடடத்தில உள்ள அனைத்து சட்டமன்ற தொகதிகளிலும் 150க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், திருமஙகலம் சட்டமனற தொகுதியில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமாரும், மதுரை மேற்கில் போட்டியிடும் தமிழக கூட்டுறவுத்துறை அமைசசா செலலூர் ராஜூவும் நட்சத்திர வேட்பாளர்களாவர். மதுரை மாவடடத்தில் அதிமுக 8 தொகுதிகளிலும் மதுரை மத்தி, மதுரை வடக்கு என இரணடு தொகுதிகளை கூட்டணிக் கடசிகளான பாஜக மற்றும் அகில இந்திய பசும்பொன் தேவர் கழகத்திற்கும் வழங்கியுளளது.

அதே போன்று திமுக உசிலம்பட்டி, மேலூர், திருப்பரங்குன்றம், மதுரை தெற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளை கூட்டணி கட்சிகளான அகில இந்திய பார்வர்டு பிளாக், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மதிமுக ஆகியவற்றிற்கு வழஙகிவிடடு எஞ்சியுள்ள 6 தொகுதிகளில போடடியிடுகிறது.

மதுரை: 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது | Vote Counting Begins In Madurai For Ten Ac

வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஒவ்வொன்றிலும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகர் எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு வாக்கு எண்ணிக்கை மையங்களும் புறநகரில் இரண்டு மையங்களும் அமைந்துள்ளதால் ஒட்டுமொத்தமாக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களில் மத்திய பாதுகாப்பு படை போலீசாரும் அடங்குவர். முதலாவதாக காலை 7 மணி முதல் 8 மணிக்குள் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. தபால் வாக்குகளை எண்ணி முடித்து முடிவுகளை தாமதப்படுத்தாமல் 9 மணிக்குள் அறிவிக்க வேண்டும் என திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

கடைசி நேரத்தில் ஏற்படும் குளறுபடிகளை தவிக்கவே முன்னதாக இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளன. தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிந்தவுடன் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் தொடர்ந்து அறிவிக்கப்படும்.

குறைந்தபட்சம் 25 சுற்றுகளில் இருந்து 30 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அதிகாரபூர்வமான முடிவுகள் வெளிவர இன்று நள்ளிரவு ஆகலாம் வாக்கு எண்ணிக்கை மைய முகவர்கள் தெரிவிக்கின்றனர்.