எதற்கு ஓட்டு போட போகணும்? ஓட்டு போட்டா மாற்றம் வந்துவிடுமா? நடிகர் விவேக்
நாளை தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து நடிகர் விவேக் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த டுவிட்டர் வீடியோவில், ஒவ்வொரு ஓட்டும் நமது உரிமை அதை நாம் விட்டு தரக்கூடாது. அல்லது நாம் ஒருவர் ஓட்டு போட்டால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? என்று நீங்கள் நினைக்கக்கூடாது. அப்படி நினைத்தால் ஜனநாயகத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய தீங்கு.
வாக்களிக்கச் செல்லும் போது முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் வீட்டுக்குள் வந்ததும் சோப் தண்ணீரில் கை கழுவுதல் - அவசியம்! pic.twitter.com/u57PeJ2jKO
— Vivekh actor (@Actor_Vivek) April 5, 2021
ஒவ்வொரு ஆளுமையையும் தேர்ந்தெடுப்பது நமது விரல் மை. அதை நாம் மறந்துவிடக்கூடாது. அதுதான் ஜனநாயகத்தின் வலிமை .அதை நாம் எப்போதும் விட்டுக்கொடுக்க கூடாது.
அதனால் எல்லோரும் வாக்குச்சாவடிக்கு சென்றோ, வயதானவர்கள் தபால் மூலமாகவோ வாக்குகளை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.
வாக்களிக்கச் செல்லும் போது அனைவரும் முகக்கவசம் அணிந்து செல்லவும், சமூக இடைவெளி விட்டு நின்று வாக்களிக்க வேண்டும். வீட்டுக்குள் வந்ததும் சோப் தண்ணீரில் கை கழுவுதல் அவசியம் என்று நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார்.