உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்: சீமானின் பேச்சால் பரபரப்பு

seeman vote ntk aiadmk
By Jon Apr 02, 2021 06:39 PM GMT
Report

 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என பேசியதால் பரபரப்பானது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தங்களுடைய வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணி அதிதீவிரமாக நடந்து வருகிறது. 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து களமிறங்குகிறது, எனவே சீமான் தொடர்ச்சியாக சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு திருவொற்றியூர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, ’எளிய மக்கள் உங்களின் பிள்ளைகளான எங்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறினார்.

இதைக்கேட்டதும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைய, உடனடியாக விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.