நான் நடிகை தான் என்பதற்காக எனக்கு வாக்களிக்காதீர்கள்: ஸ்ரீபிரியா

covid actress vote Mailapur
By Jon Mar 29, 2021 03:21 PM GMT
Report

நான் நடிகை என்பதற்காக யாரும் எனக்கு வாக்களிக்க வேண்டாம் என மயிலாப்பூர் தொகுதி வேட்பாளரான ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார். மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் நடிகை ஸ்ரீபிரியா. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

அப்போது பெண் வாக்காளர்களிடம் பேசுகையில், பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பெண் வேட்பாளரான என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், நடிகை என்பதால் எனக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம், நீங்கள் என்னை வெற்றி பெற செய்து எம்.எல்.ஏ. ஆக்கினால், உங்களது குரலாக சட்டமன்றத்தில் எப்போதும் எனது குரல் ஒலிக்கும்.

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் மாறி, மாறி வாக்களித்து நீங்கள் ஏமாறியது போதும். இந்த முறை எனக்கு வாய்ப்பு தாருங்கள். உங்கள் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகள், குறைகள் 100 நாட்களுக்குள் நிவர்த்தி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார். ஸ்ரீ பிரியா நடிகை என்பதால் அவருடன் செல்பி எடுக்க மக்கள் ஆர்வமாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Gallery