ரோட்டு கடையில் தயிர் பூரி சாப்பிட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
சென்னையில் ரோட்டுக் கடையில் தயிர் பூரி சாப்பிட்ட 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தயிர் பூரியில் கரப்பான் பூச்சி
சென்னை பாண்டி பஜார் பகுதியில் உள்ள ஹாட் சிப்ஸ் கடையில் கொரட்டூரை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி நித்யாவுக்கு அளிக்கப்பட்ட தயிர் பூரியில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்துள்ளது.
இது குறித்து கடை மேலாளரிடம் நித்யா குடும்பத்தினர் கேள்வி எழுப்பிய போது அலட்சியம் காட்டியதாக தெரிகிறது.
இதன் காரணமாக நித்யாவுக்கு வாந்தி ஏற்படவே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பி உள்ளார்.
சுத்தம் இல்லாதது கண்டுபிடிப்பு
இது குறித்து நித்யா குடும்பத்தினர் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் அளித்துள்ளனர். புகாரை அடுத்து கடையில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு நடத்தினர்.
இதையடுத்து ஆய்வுக்கு பின்னர் உணவில் கிடந்தது கரப்பான் பூச்சி இல்லை. மின் விளக்கு ஒளியில் வரும் பூச்சி தான்.
சமையலறை பகுதி துாய்மையாக பராமரிக்கப்படவில்லை எனவும், சமையல் பொருட்கள் முறையாக மூடி வைக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து விதிகளை சரியாக கடைபிடிக்காததால் கடைக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டுள்ளனர்.