ஸ்டாலின் பிரச்சாரத்தில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த தொண்டர்கள்
மேட்டுப்பாளையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் வலிப்பு வந்து மயங்கி விழுந்த தொண்டர்கள். கடும் வெயிலில் வெகுநேரமாக ஸ்டாலினுக்காக காத்திருந்தால் நேர்ந்த அவலம்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு இன்று திமுக தலைவர் ஸ்டாலின் மேட்டுப்பாளையம், குன்னூர், உதகை, கூடலூர் உள்ளிட்ட 4 தொகுதியின் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள காலை 8மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக காலை 7 மணி முதலே திமுக கட்சியை சேர்ந்தவர்கள் பேருந்து நிலையத்தின் முன் பகுதிகளிலும் உள்ள பகுதிகளிலும் காத்திருந்தனர். ஆனால் ஸ்டாலின் காலை 10.30 மணிக்கு தான் வந்தார். இதனால் கடும் வெயிலில் காத்திருந்த சில திமுகவினர் மயங்கி விழுந்தனர்,சிலருக்கு வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்றினர்.
