புடின் உயிருடன் இல்லையா - பகீர் கிளப்பும் உக்ரைன் அதிபர்!
விளாடிமிர் புடின் உடல் நிலை குறித்து உக்ரைன் அதிபர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
புடின் உடல் நிலை
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் 11 மாதங்களாக நீடித்து வருகிறது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டின் நிகழ்ச்சியில் காணொளிக் காட்சி மூலம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உரை ஆற்றினார்.

யாருடன் பேசுவது என்று இப்போது எனக்கு புரியவில்லை. புடின் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. இல்லை என்றால் யார் முடிவு எடுப்பது? என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளார்.ஜெலென்ஸ்கியின் இந்தக் கூற்றுக்கு ரஷ்யாவும் பதிலடி கொடுத்துள்ளது.
ஜெலென்ஸ்கி கருத்து
அதில், புடின் மற்றும் ரஷ்யா இருப்பதை ஜெலென்ஸ்கி ஒருபோதும் விரும்பமாட்டார் என ரஷ்யா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புடினின் வயது இப்போது 70 வயதாகிறது, இப்போது அவரது உடல்நிலை முன்பு போல் நன்றாக இல்லை என்றும் சிலர் யூகித்துள்ளனர். புடின் பனிக்கட்டி நீரில் குளிக்கும் படம் இதுவரை வெளிவராததற்கு இதுவே காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.