விஜய் மக்கள் இயக்கத்தின், 'தளபதி விஜய் நூலகம்' - எப்படி..? புகைப்படத் தொகுப்பு!

Vijay Tamil nadu Thalapathy Vijay Makkal Iyakkham
By Jiyath Nov 19, 2023 04:18 AM GMT
Report

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 'தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய் நூலகம் 

நடிகர் விஜய் அரசியலில் கால் பாதிக்க உள்ளார் என்று அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் கல்வி விழா ஒன்றை நடத்தியது மட்டுமின்றி அதில் அரசியலும் பேசி, தனது அரசியல் வருகைக்கு விஜய் வலு சேர்த்தார்.

விஜய் மக்கள் இயக்கத்தின்,

இதனையடுத்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு பாட சாலை தொடங்கப்பட்டது. மேலும், ரத்ததான மையம், விஜய் விழியகம், விஜய் மினி கிளினிக் உள்பட மக்களுக்கு தேவையான பல சேவை மையங்களை விஜய் துவங்கினார். இதன் மூலம், வரும் 2026 சட்டசபைத் தேர்தலுக்கு விஜய் தயாராகி வருகிறார் என்பதும் அவரின் நடவடிக்கை மூலம் தெரியவருகிறது.

விஜய் மக்கள் இயக்கத்தின்,

இந்நிலையில் அதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் நூலகம் தொடங்குவதற்கு விஜய் திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகின. இந்த நூலகத்தில் அரசியல் தலைவர்கள், தேசிய தலைவர்கள், தமிழர்கள் வரலாறு குறித்த புத்தகங்கள் இடம் பெரும் என்றும் கூறப்பட்டது.

விஜய் மக்கள் இயக்கத்தின்,

அந்த வகையில், முதல் கட்டமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 11 இடங்களில் ‘தளபதி விஜய் நூலகம்’ திறக்கப்பட்டது. விஜய் மக்கள் இயக்கம் அமைப்பின் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி சார்பில், தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3-வது தெரு, சிடிஓ காலனி, மேற்கு தாம்பரத்தில் ‘தளபதி விஜய் நூலகம்’ திறக்கப்பட்டது.

அண்டார்டிகாவில் பயணிகள் விமானம் தரையிறங்கி உலக சாதனை - அதுவும் பனி ஓடுபாதையில்!

அண்டார்டிகாவில் பயணிகள் விமானம் தரையிறங்கி உலக சாதனை - அதுவும் பனி ஓடுபாதையில்!


விஜய் மக்கள் இயக்கத்தின்,

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நூலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, பல்லாவரம் தொகுதியில், தாம்பரம் மாநகராட்சி மும்மூர்த்தி நகர் 5-வது தெருவில் தொடங்கப்பட்டது. இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 இடங்களிலும் நூலகம் திறக்கப்பட்டது.

விஜய் மக்கள் இயக்கத்தின்,

அரியலூர், நாமக்கல் மேற்கு, சென்னை கிழக்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை வடக்கு மற்றும் வேலூர் மாவட்டங்களில் தலா ஒன்று என மொத்தம்11 இடங்களில் நூலகம் திறக்கப்படுகிறது.

விஜய் மக்கள் இயக்கத்தின்,

இதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக வரும் 23-ம் தேதி நெல்லை மாவட்டத்தில் 5 இடங்கள், கோவையில் 4 இடங்கள், ஈரோட்டில் 3, தென்காசியில் 2, சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி, திருப்பூரில் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடம் என மொத்தம் 21 இடங்களில் நூலகம் திறக்கப்படுகிறது.