ஆடியோ லான்ச் இல்லைனா என்ன? ஆட்சிய புடிச்சிட்டா.. விஜய் மக்கள் இயக்க போஸ்டர்களால் பரபரப்பு!
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அரசியல் வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
லியோ
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் அர்ஜுன்,மன்சூர் அலி கான், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கின்றனர்.
இசையமைப்பாளர் அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார். அண்மையில் 'நா ரெடிதான்' என்ற பாடல் வெளிவந்து ஹிட் அடித்தது. ஆனால் பாடலின் வரிகளில் 'விஜய் குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கிறார்' என்று சர்ச்சை எழுந்தது. விரைவில் திரைக்கு வரவிருப்பதால் படத்தின் போஸ்டர்களை படக்குழு அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.
இதனையடுத்து படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வரும் 30ல் நடத்த முடிவானது. அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அதிகப்படியான பாஸ்கள் கோரிக்கை எழுந்ததால் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆடியோ லான்ச் இல்லைனா என்ன?
மேலும், இதில் அரசியல் அழுத்தம் இல்லை என தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்திருந்தது. ஆனால் இதில் அரசியல் நோக்கம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது விஜய் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அரசியல் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நகர் முழுவதும் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் "ஆடியோ லான்ச் இல்லைனா என்ன! ஆட்சியை புடிச்சிட்டா போச்சி! என்ன நண்பா? என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.