அதிபராகும் டொனால்ட் டிரம்ப் உயிருக்கு ஆபத்து - ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை!
டொனால்ட் டிரம்ப் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 5 ஆம் தேதி நடந்தது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரான, இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் போட்டியிட்டனர்.
270 பேரின் ஆதரவு பெறுபவரே, அடுத்த அதிபராக முடியும் எனக் கூறப்பட்டு இருந்த நிலையில் தனது போட்டியாளர் கமலா ஹாரிஸை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்று டொனால்ட் ட்ரம்ப் 2 வது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
இதனையடுத்து அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார். இன்னும் பதவியேற்புக்கு 2 மாதங்களே உள்ளது. இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் உயிருக்கு ஆபத்து என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்து உள்ளார்.
ஆபத்து
முன்னதாக அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரத்தின்போது டொனால்ட் டிரம்ப் மீது 2 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் அதிர்ஷ்டவசமாக டொனால் டிரம்ப் உயிர் தப்பினார். மேலும் மற்றொரு தாக்குதலிலிருந்தும் அவர் உயிர் பிழைத்தார்.
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டொனால் டிரம்ப்பை கவனமாக இருக்கும்படியும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்து உள்ளார். இது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.