கண்பார்வை மங்கி, உணர்ச்சியற்று போன நாக்கு - மரண பிடியில் புதின்!
ரஷ்ய அதிபர் புதினின் மருத்துவ அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதின்
கடந்த ஆண்டு ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை பேசு பொருளாகவே உள்ளது. இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்த புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், புதினுக்கு தலையில் கடுமையான வலி, மங்கலான பார்வை, நாக்கில் உணர்வின்மையும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வலது கை மற்றும் காலில் மெல்ல உணர்வை இழக்கத் தொடங்கி உள்ளதாகவும் அவருக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சை தேவை என்றும் மருத்துவர்கள் நினைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நிலை மோசம்
புடினின் இந்த நிலை அவரது குடும்பத்தினரை பீதியில் தள்ளியுள்ளதாகவும், அவரது மரணம் நெருங்கிவிட்டதோ என அச்சமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இவர் பார்கின்சன் நோய் மற்றும் புற்றுநோயின் ஆரம்ப நிலைகள் இரண்டையும் எதிர்கொண்டு வருகிறார் என செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ரஷ்ய அதிபர் மாளிகையும், அமைச்சர்களும் புதின் ஆரோக்கியமாகவே இருப்பதாகவே கூறிவருகின்றனர்.