கலாச்சாரம் என்றால் என்ன தெரியுமா...? - ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அதிபர் புதின் எதிர்ப்பு...!

United Russia Vladimir Putin
By Nandhini Feb 22, 2023 07:17 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள விவகாரம் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிபர் ஜோ பைடன் உக்ரைன் திடீர் பயணம்

ஒரு வருடமாக உக்ரைன் - ரஷ்யா போர் நடந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் திடீரென்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு பயணம் மேற்கொண்டார். அமெரிக்க அதிபர் ஜோ பிடனும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் நேற்று கியேவில் சந்தித்து பேசினர்.

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த ஜோ பைடனின் யாரும் எதிர்பாரத வகையில் உக்ரைன் சென்றார். கடைசி வரை அவருடைய பயண விவரம் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. போருக்கு மத்தியில் ஜோ பைடைனின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

உச்சக்கட்ட கோபத்தில் ரஷ்யா

உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில் கீவ் நகருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சென்றுள்ள விவகாரம் ரஷ்யாவிற்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உக்ரைன் பயணத்தையடுத்து, அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகியுள்ளது. Start என்னும் இந்த ஒப்பந்தம் அமெரிக்கா, ரஷ்யா இடையே அணு ஆயுதங்களை குறைக்க வழிவகுக்கிறது. இந்த ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகியுள்ளதால் இந்த விவகாரம் உலக மக்களால் உற்று நோக்கப்படுகிறது.

vladimir-putin-homosexuality-strong-opposition

ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு எதிர்ப்பு

இந்நிலையில், மேற்கத்திய நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து ரஷ்ய நாடாளுமன்றத்தில் புதின் பேசுகையில்,

மேற்கத்திய நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன். மேற்கத்திய நாடுகள் குடும்ப அமைப்பு, கலாச்சார-வரலாற்று அடையாளத்தை அழிக்கிறது.

குழந்தைகள் விவகாரத்தில் பல வக்கிரங்கள் அரங்கேற்றப்படுகின்றன. மேலும், குடும்பம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு மட்டுமே. அதுபோல் பிரார்த்திக்கும் கடவுளுக்கு ஆண்பால், பெண்பால் பெயரின்றி பாலின-நடுநிலை பிரதிபெயர்களை அறிமுகப்படுத்த பரிசீலித்து வருவதாக இங்கிலாந்து தேவாலயம் அறிவித்துள்ளது. இதற்கு நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்றார்.