விரைவில் கட்சியின் பெயர்... கூட்டணி! விகே சசிகலா கொடுத்த அப்டேட்
தான் தொடங்கியுள்ள புதிய கட்சியின் பெயர் குறித்து விரைவில் அறிவிப்போம் என விகே சசிகலா தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்த நாளான கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி பசும்பொன்னில் நடந்த விழாவில் புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டார் விகே சசிகலா.
அதன் போதே தனது கட்சி கொடியினையும் வெளியிட்டார், அண்ணா எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்களுடன் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்திலான கொடியை அறிமுகம் செய்தார்.
இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, புதிதாக தொடங்கிய கட்சியின் பெயரை விரைவில் தெரிவிப்போம். முடிந்த வரை ஒரு வாரத்துக்குள்ளாகவே அறிவிப்போம் என தெரிவித்தார்.
மேலும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவே புதிய கட்சியை தொடங்கியுள்ளதாகவும், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.