தவெக கூட்டணி? விரைவில் வெளியாகும் சசிகலாவின் முடிவு
சசிகலா தலைமையிலான அண்ணா திராவிடர் கழகத்தை தவெக-வுடன் கூட்டணி வைக்க செங்கோட்டையன் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் திவாகரன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதில் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை தொடங்கினார், 2022ம் ஆண்டு இந்த கட்சியை சசிகலா தலைமையின் கீழ் கொண்டுவந்தார்.

இந்நிலையில் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் தவெகவுடன் கூட்டணி வைக்க செங்கோட்டையன் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது வரை தவெக எந்த கட்சியுனும் கூட்டணி அமைக்கவில்லை. வருகிற 24ம் தேதி விக்கிரவாண்டி சாலையில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ள சசிகலா, இறுதி முடிவை வெளியிடலாம் என தெரிகிறது.
தவெகவுடன் கூட்டணி இல்லாத பட்சத்தில் தனித்து போட்டியிட முடிவெடுக்கலாம் என்றும், 25 தொகுதிகளில் களமிறங்கலாம் எனவும் கூறப்படுகிறது.
