அஇபுதமமுக கட்சியிலிருந்து சசிகலா நீக்கம் - நிறுவன தலைவர் அதிரடி
vk sasikala expelled from aipmmk party: அஇபுதமமுக கட்சியிலிருந்து வி.கே.சசிகலா நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அஇபுதமமுகவிலிருந்து சசிகலா நீக்கம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்த நாளான கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி பசும்பொன்னில் நடந்த விழாவில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார் வி.கே.சசிகலா.

மேலும், தொண்டர்கள் ஆரம்பித்த கட்சியில் எம்ஜிஆர் இணைந்தது போல், நானும் தொண்டர் ஆரம்பித்த கட்சியில் இணைத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிறுவனர் சக்கரவர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதில் பேசிய அவர், கடந்த 2026 ஆம் ஆண்டு வி.கே. சசிகலா எங்கள் கட்சியில் பணியாற்ற விரும்புவதாக கூறி சேர வந்தார். மேலும் கட்சியின் பொதுச் செயலர் பதவியையும் எடுத்துக் கொண்டார்
ஆனால், எங்கள் யாரையும் சந்திக்கவில்லை, தொண்டர்களையும் சந்திக்கவில்லை. அவரை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து தொண்டர்களிடம் ஆலோசித்த பின்னர், அதன்படி சசிகலா பொதுச்செயலாளர் பதவியிலிலிருந்து நீக்கப்படுகிறார்" என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளோம் எனவும், கட்சியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என தெரிவித்துள்ளார்.